தாரா அவர் வருவரா பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Arasilangkumari (1961) (அரசிளங்குமரி)
Music
G. Ramanathan
Year
1961
Singers
S. Janaki
Lyrics
தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா


இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
என் தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா