இதுக்குத்தானா இதுக்குத்தானா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Thirumagan (2007) (திருமகன்)
Music
Deva
Year
2007
Singers
Madhushree, Naresh Iyer
Lyrics
இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும் இதுக்குத்தானா
இதுக்குத்தானா
ஏய் இதுக்குத்தானா
என் நெத்தி கொதிச்சதும் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா
கொய்யாப்பழம் வேணுமா
கோவப்பழம் வேணுமா
நவ்வாப்பழம் வேணுமா
புளியம் பழம்
இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே
ஏ இதுக்குத்தானே
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே

கண்ணுக்கும் கண்ணுக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
தண்ணிக்கும் மண்ணுக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
சட்டிக்கும் மூடிக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
வேட்டிக்கும் சேலைக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
மண்ணப் பெனஞ்சேன்
பானையாச்சு
பொண்ணப் பெனஞ்சேன்
காதலாச்சு
மனசுக்குள்ள சூள போட்டு
சுட்டு முடிச்சாச்சே
தரையில் கெடந்த ஒட்டுச் சகதி
தலையில் சொமக்கும் பானையாச்சே
தயாத்து முடிஞ்ச அர்னாக்கயிறு தாலிக் கொடியாச்சே
மொத்தமா பாத்ததும் புத்தியே ஓடல
என்னமோ கேக்கணும் ஒண்ணுமே தோணல
கொய்யாப்பழம் வேணுமா
கோவப்பழம் வேணுமா
நவ்வாப்பழம் வேணுமா
புளியம் பழம்
இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே
ஏ இதுக்குத்தானே
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே

வானுக்கும் மண்ணுக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
ஆணுக்கும் பொண்ணுக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
பூவுக்கும் நாருக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
பொட்டுக்கும் நெத்திக்கும்
சிஞ்சக் சிஞ்சக்
கனிஞ்ச பழத்தக் காட்டாதே
காட்டி காட்டி பூட்டாதே
யானையப் புடுச்சு பானைக்குள் அடச்சு
மறைக்கப் பாக்காதே
வெந்த மண்ணா நான் கெடக்கேன்
தேனு ஊத்தி நனைக்காதே
விருப்பம் போல வளஞ்சு கொடுக்க
என்ன கொடைக்காதே
வயித்த தவர எல்லாம் பசிக்க
எத நான் எடுக்க பசிய தணிக்க
கொய்யாப்பழம் வேணுமா
கோவப்பழம் வேணுமா
நவ்வாப்பழம் வேணுமா
புளியம் பழம்
இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும்
இதுக்குத்தானா
இதுக்குத்தானா
ஏய் இதுக்குத்தானா
என் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.