Thirumagane Thirumagane Lyrics
திருமகனே திருமகனே பாடல் வரிகள்
Last Updated: Jul 16, 2026
Movie Name
Thirumagan (2007) (திருமகன்)
Music
Deva
Year
2007
Singers
Sadhana Sargam
Lyrics
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே
காதல் என்பது என்ன
கண்ணிமை என்பது என்ன
பூப்பின் பொருள் தான் என்ன
என் பூவின் பொருள் என்ன
கண்ணோடு
நீர் வழிந்தோட
கண்ணீரில் மை வழிந்தோட
மையோடு உயிர் வழிந்தோட
வந்தாயே என் உயிர் மீள
கையோடு வளையாக
காலோடு கொலுசாக
மெய்யோடு உயிராக
சேர்வாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
தொடுதல் என்பது என்ன
ஆண் தொல்லை என்பது என்ன
செல்லக்கலவரம் என்ன
உயிர் சேரும் கலை என்ன
சேற்றோடு பூக்களும் உண்டு
பூவோடு சேருகள் இல்லை
என் தேகத்தில் ஓணங்கள் உண்டு
என் ஆசைக்கு ஓணங்கள் இல்லை
குறையான குடமொன்று கூத்தாடும் நிலை கண்டு
மழையாக நீ வந்து
நிறைவாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே
காதல் என்பது என்ன
கண்ணிமை என்பது என்ன
பூப்பின் பொருள் தான் என்ன
என் பூவின் பொருள் என்ன
கண்ணோடு
நீர் வழிந்தோட
கண்ணீரில் மை வழிந்தோட
மையோடு உயிர் வழிந்தோட
வந்தாயே என் உயிர் மீள
கையோடு வளையாக
காலோடு கொலுசாக
மெய்யோடு உயிராக
சேர்வாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
தொடுதல் என்பது என்ன
ஆண் தொல்லை என்பது என்ன
செல்லக்கலவரம் என்ன
உயிர் சேரும் கலை என்ன
சேற்றோடு பூக்களும் உண்டு
பூவோடு சேருகள் இல்லை
என் தேகத்தில் ஓணங்கள் உண்டு
என் ஆசைக்கு ஓணங்கள் இல்லை
குறையான குடமொன்று கூத்தாடும் நிலை கண்டு
மழையாக நீ வந்து
நிறைவாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே