ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Thaai Naadu (1989) (தாய் நாடு)
Music
Manoj Gyan Varma
Year
1989
Singers
T. M. Soundararajan, P. Susheela
Lyrics
Aabavanan
ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா....

அதிகாலையில் ஆதவன் சிரிப்பு – அதில்
ஆயிரம் மலர்களின் விழிப்பு – இந்த
மலருக்கு மனம் விடும் அழைப்பு – அதில்
மறைந்திடும் மனதினின் தவிப்பு ஆ...ஆ....(ஒரு)

இது பனித்திரை மூடிய பார்வை – அந்த
பார்வையில் மாறுதல் தேவை – நல்ல
மாறுதல் நாம் பெறும் போது – அந்த
திரையும் விலகலாம் அன்பு பயணமும் தொடராலாம்
போதும் பொய் கோபம் தடுமாறும் பெண் பாவம்....(ஒரு)

இது இரு மனம் போகின்ற பயணம் – அதில்
ஒரு மனம் வாடிடும் தருணம் – நல்ல
ஆறுதல் நீ தரும்போது - எந்தத்
திரையும் விலகலாம் அன்பு பயணம் தொடரலாம்
கோபம் இனி மாறும் இரு நெஞ்சம் ஒன்று சேரும்

ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது அண்ணா
வெள்ளைப் பூ முகம் நெஞ்சம் தேடுது
கொஞ்சம் பாரடா அண்ணா.....
ருருருருரூ....லாலாலலலலலாலா........