அந்தக் கண்ணனன்றோ பாடல் வரிகள்

Movie Name
Kollaikaran Magal (1968) (கொலைகாரன் மகள்)
Music
T. G. Lingappa
Year
1968
Singers
P. B. Srinivas, S. Janaki
Lyrics
K. Devanarayanan

அந்தக் கண்ணனன்றோ என் தோழன்
அவன் காதலின் கலையில் தீரன்
இந்த பூமியிலே அவன் ஆட்சியிலே
பெண்ணானதே பெருமைதானே....(அந்தக்)

உனது விழியில் ஒளியாய் நின்று
மயக்கிய கள்வன் யார்
பெண்மை கண்டு மயங்கும் நெஞ்சில்
இன்று வாழ்வது நானே

அந்தக் கன்னியன்றோ என் தோழி
அவள் காதலிலே என் ராணி...

நெருங்கி வந்தால் தொடுகின்றாயே
பருவத்தின் மயக்கதினால்
நிலவாய் வந்து மலராய் நின்று
கீதம் பாடிட வா

கண்ணன் சொன்னால்....தடைகள் என்ன
தடுத்தால் வேகம் தானே.......(அந்தக்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.