உன்னையே நம்பியே பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Aranmanai (2014) (அரண்மனை)
Music
Bharathwaj
Year
2014
Singers
Mukesh
Lyrics
உன்னையே நம்பியே கதிரவன் உதிக்குது
உயிர்களே பிறக்குது ஆலயம் திறக்குதம்மா
சிவனவன் பாதியே ஜகத்குரு ஜோதியே தேரிலே எழுந்திடம்மா
நற்பவி நற்பவி பக்தரை காத்திடம்மா

ஜெய ஜெய சங்கரி ஹர ஹர சங்கரி
ஜெய ஜெய சங்கரி ஹர ஹர சங்கரி

அம்மன் வராளே மெய் ஆச்சி வராளே
அம்மன் வராளே திருக்காட்சி தராளே
முத்து பவளமும் மோகன புன்னகை
முகத்தில் மின்ன மின்ன மின்ன மின்ன
மூளை எலும்பினை மூட்டுடன் தின்பவள் அம்மன் வராளே

பம்பை சத்தம் உடுக்கை சத்தம் ஊரு அதிருது
மேள சத்தம் வேட்டு சத்தம் காற்றில் பரவுது
மஞ்சளாடை மகிமையிலே மனசு குளிருது
மக்கள் தலை அலை அலையாய் கண்ணில் தெரியுது
தீ மிதிச்சு பறந்த சாம்பல் வானை மூடுது
தேவி அவள் மனம் குளிர்ந்தா வம்சம் வாழுது

சத்திய ரூபினி சக்கர வாசினி உற்சவம் காண்கிற நேரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் க்லீம், ஓம் ஸ்ரீம் க்லீம் க்லீம்
அந்தமும் ஆதியும் ஆண்டிடும் சூலினி அழகிய தேரினில் ஜாலம்
ஓம் ஸ்ரீம் க்லீம் க்லீம், ஓம் ஸ்ரீம் க்லீம் க்லீம்
சலங்கைகள் குலுங்கிட சாகசம் புரிந்திட சாமுன்டியே உன் வீரம்
சூலத்தை எடுத்திட சூழ்பகை ஒழிஞ்சிடும் ஜெய ஜெய சங்கரி கோலம்
நாளும் உந்தன் அரசாட்சி பூமியெங்கும் அருளாட்சி
யாரு எங்கே எதிர் ஆட்சி கெளரி மனோகரி மீனாட்சி
ரத்த சேற்றில் குளிப்பாட்டு தீய செய்கை நிப்பாட்டு
எங்கும் என்றும் உன்பாட்டு துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய சங்கரி ஹர ஹர சங்கரி
சர்வமும் சங்கரி சரணமே சங்கரி
சர்வமும் சங்கரி சரணமே சங்கரி
நெனச்சத நடத்தி வைப்பா மாரியம்மா தான்
விதைச்சதை முளைக்க வைப்பா காளியம்மா தான்
நெனச்சத நடத்தி வைப்பா மாரியம்மா தான்
விதைச்சதை முளைக்க வைப்பா காளியம்மா தான்
துஷ்டரை துரத்தி நிப்பா நீலியம்மா தான்
படும் கஷ்டத்தை மாத்தி வைப்பா சூலியம்மா தான்
மர்மத்தை புரியவைப்பா நாடியம்மா தான்
அன்பு மனங்களை ஆண்டு நிப்பா அழகு அம்மா தான்

பேச்சாயினி எங்கள் பிடாரி நீ
காத்தாயினி எங்கள் ராக்காயி நீ
அங்காளி நீ சக்தி ஆங்காரி நீ
துளுக்கானம்மா அம்மா துர்கையம்மா
சண்டி சாமுண்டி மதுரை முண்டி முனியம்மா
திரிஈஸ்வரி வீர பரமேஸ்வரி
காமேஸ்வரி திரி சூலேஸ்வரி
வஜ்ரேஸ்வரி அம்மா நாகேஸ்வரி
மாகேஸ்வரி அம்மா பத்மேஸ்வரி
பரமேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி
விஸ்வேஸ்வரி அம்மா வாகேஸ்வரி
புவனேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
(அம்மா… தாயே… நீயே…. கதி…)
 சங்கரி சாமுண்டி சண்முகி நற்பவி
மாலினி சூலினி வாகினி மாகினி
அந்தரி சுந்தரி சௌந்தரி த்ர்யம்பகி
நான்முகி நாயகி நாரணி பூரணி
பார்வதி பைரவி பர்வதவைதினி
பத்மினி மாலினி சூலினி ரோகினி
மந்திரி வைஷ்ணவி காலம்நீ பயங்கரி
ஈஸ்வரி பயங்கரி முதல்விநீ மகேஸ்வரி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.