ரோஜாப்பூ மாலையிலே பாடல் வரிகள்

Movie Name
Vaanathaippola (2000) (வானத்தைப்போல)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
K. S. Chithra, Mano
Lyrics
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே

எங்கள் வீட்டின் பூஜை அறையில்
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே

உன் பேரை தான் பேரில் சேர்த்திடுவாள் இனி உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்கள் வீட்டினில் நீதான் தேரோட்டம்

காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்

ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த

ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேற்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.