அவள் ஒரு மேனகை பாடல் வரிகள்

Movie Name
Natchathiram (1980) (நட்சத்திரம்)
Music
Shankar-Ganesh
Year
1980
Singers
Lyrics
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி... சிவரஞ்சனி... சிவரஞ்சனி...


கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை (இசை)
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...


ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம் (இசை)
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம் (இசை)
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...


அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேன் உலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம் (இசை)
காலமே...
அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே (இசை)
தாளமே...
அவள் கால்கள் கேட்டபடி தாவுமே (இசை)
மொழியோ ஆலயச் சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ... ஆ... ஆ...
அவள் தஞ்சைத் தரணியில்
கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தன் அன்றோ

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.