Lyrics
Thalaivaari Poochoody Lyrics
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாடச்
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
மலைவாழை அல்லவோ கல்வி? - சென்று
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
கடிதாயிருக்கும் இப்போது - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
படியாத பெண்ணாய் இருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடும்முன் ஓடு! - என்
கண்ணல்ல அண்டை வீட்டுப் பெண்களோடு!
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
மலைவாழை அல்லவோ கல்வி? - சென்று
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
கடிதாயிருக்கும் இப்போது - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
படியாத பெண்ணாய் இருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடும்முன் ஓடு! - என்
கண்ணல்ல அண்டை வீட்டுப் பெண்களோடு!
People
Related People
6 people