பார்த்துப் பார்த்துக் கண்கள் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Nee Varuvai Ena (1999) (நீ வருவாயென)
Music
S. A. Rajkumar
Year
1999
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
(பார்த்து பார்த்து…)

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
(பார்த்து பார்த்து…)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.