பூங்குயில் பாட்டு பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Nee Varuvai Ena (1999) (நீ வருவாயென)
Music
S. A. Rajkumar
Year
1999
Singers
Harini
Lyrics
Viveka
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா
திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா
வாசப் பூவு பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காத்தும் பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்தி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.