ரத கஜ துரக பதாதிகள் பாடல் வரிகள்

Movie Name
Veeram (2014) (வீரம்)
Music
Devi Sri Prasad
Year
2014
Singers
Anand, Koushik, Deepak, Jagadish
Lyrics
Viveka
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட‌
செருகளம் சிதறிடும் வீரம்

சக மனிதன் ஒரு துயரெனக் கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துகள‌ளவும் பகை புகலிங்கு தவறெனக்
காப்பரணாய் நிற்கும் வீரம்
தனி அரிமா போல எந்தத் தருணமும்
தாக்கிடும் பெரும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட‌
செருகளம் சிதறிடும் வீரம்


சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணையில்லா வீரம்
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்
எரிதழலாய் நின்று
எதிரிகள் அலறிட‌
சமரினில் திமிறிடும் வீரம்
பயம் எனும் சொல்லிங்கு பரிச்சயம் இலையென‌
பரம் பொருள் வரம் தந்த வீரம்
கடும் புனலே மோத வரும் வேளையில்
களிப்புறும் தனி வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட‌
செருகளம் சிதறிடும் வீரம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.