வா வாசுகி பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Seeru (2020) (சீறு)
Music
D. Imman
Year
2020
Singers
Shivam Mahadevan
Lyrics
Viveka
வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா

உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்

கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே
இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது

தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
எஹ் ஹேய்

தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா……ஆஅ……ஆ…..

உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்

தத்திதான் தாவுது
உன்னைத்தான் ஏங்குது

ஓர் இரு நாள் உரையாடலிலே
உலகம் உலகம்
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே
முழுதும் முழுதும்

வீரனை சூரனை போல் இருக்கு
மனதும் மனதும்
உன் வீடுள்ள வீதியில் போனாலும்
உதறும் உதறும்

உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை

உந்தன் வாசம் நுகரும்
அந்த நொடி பொழுதே
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே

வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா

உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்

கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே
இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது

தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
எஹ் ஹேய்

தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.