பொட்டப்புள்ள வேணுமாடி பாடல் வரிகள்

Movie Name
Thee Nagar (2007) (தீ நகர்)
Music
Jassie Gift
Year
2007
Singers
Prasanna, Sujatha Mohan
Lyrics
பொட்டப்புள்ள வேணுமாடி இல்ல ரெட்டப்புள்ள வேணுமாடி

மூணு புள்ள தந்தாக் கூட
நான் மொத்தமாக பெத்துத்தாரேன்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

அட கண்ணா அட கண்ணா
உன் வித்தைகள் என்னான்னு நான் ஏங்குறேன்

தொட்டா கூசும் பாகங்களை
பட்டாப் போட்டு வாங்கப் போறேன்
ஒத்தப் போர்வையில் ஓங்கூடவே
வருஷக் கணக்கில் ங்கப்போறேன்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

பல நாளா உன்ன மனசுக்குள்ள
பதியந்தான் போட்டு வச்சிருக்கேன்

ராவானா உன்ன கொசுவத்தில்
இருக்கித்தான் முடிய காத்திருக்கேன்

ஏ கண்ணுக்குள்ள கலவரம் மூட்டி விட்டுட்ட
ஏ நெஞ்சுக்குள்ள ராக்கெட்ட ஏவிவிட்டுட்ட

கட்டிலுக்கு எட்டுக்கால பூட்டடி
கனவெல்லாம் இழுத்து போத்தடி
கடிகார முள்ளெல்லாம் கழட்டிப் போடுடா

காலநேரம் பாக்காம என்ன மூடுடா
அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

காமத்தில் நான் தான் ஞானியடி சாமத்தில் நீயே சாமியடி
நான் ஒன்ன சுத்தும் தேனி ஈயடா
நீ எனக்கு எப்போதும் தீனியடா

உதடுகளால் ஒடம்பெல்லாம் நடந்து பார்க்கட்டா
உன்னுடைய உஷ்ணத்த நானும் போக்கவா

இன்பத்தின் கிடங்கு எப்போ திறக்கும்
எனக்காக அமுதம் எப்போ சுரக்கும்

எப்போதும் உன்கிட்ட சாவி இருக்கு
நீ வந்து திறந்தால் பூட்டுத் திறக்கும்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.