தங்கமா வைரமா என்ன சொல்ல பாடல் வரிகள்

Movie Name
Annadurai (2017) (அண்ணாதுரை)
Music
Vijay Antony
Year
2017
Singers
Lyrics

தங்கமா வைரமா என்ன சொல்ல
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல
சொந்தமா பந்தமா என்ன சொல்ல
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள

சத்தியமா நான் சொல்லுறேன்டா
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா
சுத்தத்திலும் சுத்தத் தங்கமடா இந்த அண்ணாதுர
தங்கமா வைரமா என்ன சொல்ல......

கண்ணிரிலே வாழுவான்
நீ கண்ணீர் விட்டால் தாங்குவான்
தன்னை நம்பி யாரும் வந்தால்
உயிரக் கொடுத்துத் தூக்குவான்
எருவ... எரிக்க எரிக்க திருநீறு
இவன... படிக்கப் படிக்க வரலாறு....(சத்தியமா)

ஒட்டு மொத்த பாசமும்
ஒத்த உருவில் தோன்றுதே
வெட்டுப் பட்ட காயமும் வாய் திறந்து பேசுதே
உளியில்... வலியை பொறுக்கும் சிலை பாரு
இவனில்... வலியில் இருக்கு கதை நூறு..(சத்தியமா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.