ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Annadurai (2017) (அண்ணாதுரை)
Music
Vijay Antony
Year
2017
Singers
Lyrics

ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே

தூளாகும் சூது தெளிவாக மோது
நீ திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது
உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு
ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே.....

நீதியும் நேர்மையும் வாழ்வில் தேவை என்று
சாத்திரம் சொன்னது உண்மை இல்லையோ.....

போலியும் பொய்களும் போட்டி போடும் போது
பூமியில் நியாயமே வாழ்வதில்லையோ
இருட்டில் நாம் நடக்கும் போது நிழலும் இல்லை
நீ வாழ உன்னைத் தவிர துணையும் இல்லை

இங்கே துன்பம் தான் வாழ்வில் பாதி
துவளாமல் முந்தி ஓடு
திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது
ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே

நன்மைகள் தீமைகள் ரெண்டும் உண்மை இல்லை
தேவைகள் மட்டுமே நியாயமானதே.....

இன்பமும் துன்பமும் தூரம் ஒன்றும் இல்லை
வாழ்க்கையில் ரெண்டுமே பாடமானதே
திருப்பங்கள் இல்லாவிட்டால் பாதை இல்லை
திரும்பாமல் நீயும் சென்றால் பயணம் இல்லை

கொன்றால் அது பாவம் என்பான்
தின்றால் அது போகும் என்பான்
திருத்திட நினைத்தால் உலகம் திருந்தாது
ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே.......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.