பூவும் பூவும் பாடல் வரிகள்

Movie Name
Aadhalal Kadhal Seiveer (2013) (ஆதலால் காதல் செய்வீர்)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Vijay Yesudas
Lyrics
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை…… ஓ ஓ ஓ

இது மாயமோ… சொல்
என் பூமியில் நானில்லையே
தேடி தேடி கண்கள் தேடுதே
வேறு பூமி செய்யத்தோனுதே
கோடி கோடி மின்னல் என்னிலே
பூப் பூக்குதே……… 

பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை…… ஓ ஓ ஓ

ஆயிரம் நாடகம்
ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய் 
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்… 
தீராத பொய்கள் பேசியே…
தித்திக்கும் இம்சை செய்கிறாய்… 
பார்வையில் கத்திகள் வீசி நீ……
நோகாமல் என்னை கொள்கிறாய்… 
அதனாலே நானும் இங்கே
தூங்காத கடலும் ஆனேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்……… 

பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை…… ஓ ஓ ஓ

சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே
செய்யவா செல்லவே உன்னிடம் 
ஹா… யாரிடம் கேட்கிறாய்
நானில்லை என்னிடம்
வானவில் ஆடலாய் ஆடுதே 
நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ…
வின் மீன்கள் மண்ணில் காண்கிறேன் 
மேகத்தில் மேயும் வெண்ணிலா
தேகத்தில் வந்து காயுதே… 
உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய் பிறந்தேன் 

பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை…… ஓ ஓ ஓ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.