Oru Manam Nikka Solluthe Lyrics
ஒரு மனம் நிற்க சொல்லுதே பாடல் வரிகள்
Last Updated: Sep 22, 2023
ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண் : தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா
ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண் : இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி
ஆண் : ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி
பெண் : ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்…..
பெண் : ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
பெண் : தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
ஆண் : வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது
பெண் : முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது….
ஆண் : உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது
பெண் : எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது
ஆண் : ஹோ நான் இன்று நான் இல்லை
நாணல் ஆகிறேன்
பெண் : லா லா லாலா
ஆண் : நதி போலே நீ சென்றால்
நானும் வளைகிறேன்
ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண் : தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
பெண் : என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.