குங்கும பொட்டின் பாடல் வரிகள்

Movie Name
Kudiyirundha Koyil (1968) (குடியிருந்த கோயில்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே
மான்தளிர் தேகம் தந்ததே
மான்தளிர் தேகம் தேகம் தேகம் தேகம்

மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பெண் என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி கோடி
(குங்குமப் பொட்டின் …)

தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கும் எங்கும் ஆனந்த கங்கை
ஜில்லென குலிர் காற்று வீசும்
மெளனமே தானங்கு பேசும் மெளனமே தானங்கு பேசும் பேசும் பேசும் பேசும்

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது சென்றதே
பூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது தூது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.