ஆடலுடன் பாடலை பாடல் வரிகள்

Movie Name
Kudiyirundha Koyil (1968) (குடியிருந்த கோயில்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்…
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.