ஏழேழு மலை பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2026

Movie Name
Yezhu Kadal Yezhu Malai (2026) (ஏழு கடல் ஏழு மலை)
Music
Yuvan Shankar Raja
Year
2026
Singers
Yuvan Shankar Raja, Santhosh Narayanan
Lyrics
Madhan Karky
ஹா... ஆஆ...

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி

எங்கேயும் எங்கேயும் உன் தடம் இல்லை
நீ இல்லா மண்ணேதும் என் இடம் இல்லை
சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன்
நூறாயிரம் ஆசைகள் சேர்த்திருந்தேன்

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி

இலையோடும் மலரோடும்
உன் விரல் ரேகை
விழியெல்லாம் வழியெல்லாம்
உன் குழல் வாசம்

நீரோடை முழுதும்
உன் வேர்வை கயல்கள்
முட்புதரின் இடையில்
உன் பார்வை முயல்கள்

இத்தேடல் முடிந்தால்
நீ அங்கே இருந்தால்
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்

கவிதைகள் அனைத்தும்
தொலைத்த ஓர் மொழியாய்
உனை உனை இழந்தே வாடுகிறேன்

தனைக் கண்ட விழியை
தொலைத்த ஓர் கனவாய்
திசைகெட்டு தறிகெட்டு ஓடுகிறேன்

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி
உன்னை தேடி... உன்னை தேடி...


Haa... aaaaa...

Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unnai thedi

Engeyum engeyum un thadam illai
Nee illaa mannedhum en idam illai
Sila aayiram aandaai kaathirundhen
Nooraayiram aasaigal serthirundhen

Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unnai thedi

Ilaiyodum malaroodum
Un viral regai
Vizhiyellaam vazhiyellaam
Un kuzhal vaasam

Neerodai muzhudhum
Un vervai kayalgal
Mutpudharin idaiyil
Un paarvai muyalgal

Iththedal mudindhaal
Nee ange irundhaal
En nenjam udaindhaalum udaium

Kavidhaigal anaithum
Tholaitha oar mozhiyaai
Unai unai izhandhe vaadugiren

Thanai kanda vizhiyai
Tholaitha oar kanavaai
Thisaikkettu tharikettu odugiren

Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unnai thedi
Unnai thedi... unnai thedi...