Chapter 104

உழவு

Uzhavu

Farming

10 kurals

Kural 1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead
Kural 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend
Kural 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
They live who live to plough and eat The rest behind them bow and eat
Kural 1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest
Kural 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
Who till and eat, beg not; nought hide But give to those who are in need
Kural 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
Should ploughmen sit folding their hands Desire-free monks too suffer wants
Kural 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
Moulds dried to quarter-dust ensure Rich crops without handful manure
Kural 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
Better manure than plough; then weed; Than irrigating, better guard
Kural 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
If landsmen sit sans moving about The field like wife will sulk and pout
Kural 1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
Fair good earth will laugh to see Idlers pleading poverty