Chapter 118

கண் விதுப்பழிதல்

Kanvidhuppazhidhal

Eyes consumed with Grief

10 kurals

Kural 1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
The eye pointed him to me; why then They weep with malady and pine?
Kural 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?
Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?
Kural 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
Eyes darted eager glance that day It's funny that they weep today
Kural 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
These eyes left me to endless grief Crying adry without relief
Kural 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly
Kural 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves
Kural 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
Let tears dry up pining pining In eyes that eyed him longing longing
Kural 1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not
Kural 1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep
Kural 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?