Chapter 2

வான்சிறப்பு

Vaansirappu

The Blessing of Rain

10 kurals

Kural 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall
Kural 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
The rain begets the food we eat
Kural 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth
Kural 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end
Kural 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Destruction it may sometimes pour But only rain can life restore
Kural 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
No grassy blade its head will rear, If from the cloud no drop appear
Kural 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
The ocean's wealth will waste away, Except the cloud its stores repay
Kural 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
Kural 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
Were heaven above to fail below Nor alms nor penance earth would show
Kural 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
Water is life that comes from rain Sans rain our duties go in vain