Chapter 4

அறன் வலியுறுத்தல்

Aran Valiyuruththal

Assertion of the Strength of Virtue

10 kurals

Kural 31 சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
From virtue weal and wealth outflow; What greater good can mankind know?
Kural 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain
Kural 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
Perform good deeds as much you can Always and everywhere, o man!
Kural 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
In spotless mind virtue is found And not in show and swelling sound
Kural 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech
Kural 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
Do good enow; defer it not A deathless aid in death if sought
Kural 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Litter-bearer and rider say Without a word, the fortune's way
Kural 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
Like stones that block rebirth and pain Are doing good and good again
Kural 39 அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
Weal flows only from virtue done The rest is rue and renown gone
Kural 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
Worthy act is virtue done Vice is what we ought to shun