Chapter 66

வினைத் தூய்மை

Vinaiththooimai

Purity in Action

10 kurals

Kural 651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
Friendship brings gain; but action pure Does every good thing we desire
Kural 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
Eschew always acts that do not Bring good nor glory on their part
Kural 653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
Those in the world desire for fame Should shun the deed that dims their name
Kural 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device
Kural 655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
Do not wrong act and grieve, "Alas" If done, do not repeat it twice
Kural 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க
சான்றோர் பழிக்கும் வினை.
Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers
Kural 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice
Kural 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
Those who dare a forbidden deed Suffer troubles though they succeed
Kural 659 அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow
Kural 660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase