நிலவை கொண்டு பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Vaali (1999) (வாலி)
Music
Deva
Year
1999
Singers
Anuradha Sriram, P. Unnikrishnan
Lyrics
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு.. (2)
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நா பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது
மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா
போதுமா அது போதுமா ஆசை தீருமா அம்மா

மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா
இன்பமா பேரின்பமா அது வேண்டுமா அம்மா..ஆ

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு (2)
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா... (2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.