விழிகளில் ஒரு காவியம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Nethiyadi (1989) (நெத்தியடி)
Music
Pandiarajan
Year
1989
Singers
P. Suseela
Lyrics
Avinasi Mani
விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்

ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே
நெஞ்சில் வேர்த்திடுதே
நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்
இல்லை வான் பறப்பேன்

விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்

தனிமையில் மனம் வாடிடுதே
துணைக் குயில் உனைத் தேடிடுதே
இரவுகள் மனம் ஈரமில்லை
இளமையும் சுமை ஆகிடுதே

அன்பு தந்த கண்ணனே உள்ளம் ஒன்று வேண்டுதே
இன்பம் துன்பம் யாவிலும் பங்கு பாதி கேட்குதே
எல்லாம் இங்கே உன்னைப் போல தோன்றிடுதே
விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்