பாக்கெட்டுல பத்துக் காசு பாடல் வரிகள்

Movie Name
Nethiyadi (1989) (நெத்தியடி)
Music
Pandiarajan
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulavar Maari
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

சொத்து சேத்தாக்க சொந்தம் வரும்
ஜாதி பேதம் தான் பறந்து போகும்
தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா
தகுதி பாக்காம பாராட்டுத்தான்

பணம்தான் எல்லாம் பணம் தான்
நெஜந்தான் இது நெஜந்தான்
எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு
பாடுறேன் தண்ணிப் போடுறேன்
ஆடுறேன் தள்ளாடுறேன்

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க....ஆமாம்..

கோழி அடிச்சாக்க கூடிடுவான்
கொறைய சொன்னாக்க ஓடிடுவான்
கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா
கண்டும் காணாம மறைஞ்சிடுவான்

நம்பாதே யாரையும் நம்பாதே
நம்பிட்டு பின்னால வெம்பாதே
எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும்
நடக்குது இந்த மேட்டரு
நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு

பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு
சொன்னது சுத்தப் பொய்யுங்க
இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க
பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த
பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.