நான் உனக்கு நல்ல பாடல் வரிகள்

Movie Name
Nethiyadi (1989) (நெத்தியடி)
Music
Pandiarajan
Year
1989
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Satta Muthan
ஆண் : நான் உனக்கு நல்ல
பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்
அதக் கண்டிப்பா நீ கத்துக்கணும்
நான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்

பெண் : எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே
நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்
நான் உன்னவிட படிச்சவ
நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்

ஆண் : உலக உருண்டைய ஒடைப்பேன்
கெடச்சத சமமா கொடுப்பேன் எப்படி....
பெண் : நீ சும்மா கொடுக்கும் பணம் தான்
சோம்பல வளர்க்கும் உரம் தான்

ஆண் : ஒழைக்கணும் கொடுக்கணும் சொன்னாங்களே
பெண் : ஆஹாஹ் கொடுத்துட்டு தெருவுல நின்னாங்களே
ஆண் : சம்சாரமே வேணான்டி சன்னியாசமே போறேன்டி சிவசிவ
பெண் : சாமியாரா போனாலும் சோறு தின்ன காசு வேணும்

பெண் : நீ எனக்கு ஒண்ணும்
பாட்டுச் சொல்லி தரவேணாம்...ஏனாம்....
நான் உன்னவிட படிச்சவ
நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்

ஆண் : கொடுக்குற கைதான் சிவக்கும்
அதுதான் உலகத்த ஜெயிக்கும்
பெண் : இந்தான்னு தந்தாலே இனிக்கும்
இல்லேன்னு சொன்னாலே கசக்கும்

ஆண் : பலன பாத்துட்டா தருமம் இல்ல
பெண் : கடன வாங்கிட்டா தூக்கம் இல்ல
ஆண் : ஆம்பளைங்களே பொம்பளைங்களே
அப்பாவி நான் இங்கே மாட்டிக்கிட்டேனே
பெண் : அப்பாவா ஆகப்போறே உன்ன நானும் விடமாட்டேன்

பெண் : நான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்
அத தெனம் தெனம் படிக்கணும்
நான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே

ஆண் : எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம்
கண்டபடி திட்டிடுவேன்
எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம்
வேணவே வேணாம்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.