Song lyrics

Manadhiley Lyrics

மனதிலே பாடல் வரிகள்

Last updated Sep 29, 2026

Music
Nivas K. Prasanna
Year
2026
Singers
Nivas K. Prasanna, Alex Samuel Jenito
Lyricist
Vijay Sethupathi
Manadhiley

Video

Manadhiley

Lyrics

Manadhiley Lyrics

மனதிலே ஒரு துளி ஓ
நனையுதே இதயமே ஓ
கருவறை பயணமோ
கண்களில் கண்ணீர் துளி
எண்ணங்களில் விண்மீன் ஒளி

சொந்தங்களோடு பந்தங்களோடு
இல்லாத இன்பம் நான் காணுறேன்
இந்திர லோகம் சந்திர லோகம்
சுந்தரி போல நான் வாழுறேன்

எங்கயோ போகும் வெண் மேகம் போல
தன்னாலே தானே நான் ஓடுறேன்
காத்தோடு போகும் காத்தாடி போல
பொன் வானம் மேல நான் ஓடுறேன்

ஹே சொப்பன சொப்பன
சொப்பன சொப்பன சொப்பன சுந்தரி
என் கண்ணுல கண்ணுல
கண்ணுல கண்ணுல கண்ணுல என்னடி
உன் வெத்தல வெத்தல
வெத்தல வெத்தல வெத்தல பல்லடி
நீ சொல்லுற சொல்லுல
சுத்துற ஆங்கிள்ல பாக்கணும் என்னடி

கன்னக்குழி சிரிப்பா
குன்னக்குடி சிறப்பா
கொள்ளி பான நெருப்பா
தனியா வாரா
உச்சி மலை காத்தா ...கூத்தா
நட்சத்திரம் பாத்தா... ஒளியா வாரா
அடியே அழகா சிரிப்பா எங்க ஆத்தா

பொழுதுகள் விடியுதே
விழுதுகள் வளருதே ஓ ஹோ ஓ
என் கனவு தீருமா
கண்களில் கண்ணீர் துளி
எண்ணங்களில் விண்மீன் ஒளி

சொந்தங்களோடு பந்தங்களோடு
இல்லாத இன்பம் நான் காணுறேன்
இந்திர லோகம் சந்திர லோகம்
சுந்தரி போல நான் வாழுறேன்

எங்கயோ போகும் வெண் மேகம் போல
தன்னாலே தானே நான் ஓடுறேன்
காத்தோடு போகும் காத்தாடி போல
பொன் வானம் மேல நான் ஓடுறேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people