கன்னத்தில் கன்னம் பாடல் வரிகள்

Movie Name
Watchman Vadivelu (2004) (வாச்மான் வடிவேலு)
Music
Deva
Year
2004
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Thamarai
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்
ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்
அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும்...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.