Oru Arai Lyrics
ஒரு அறை உனது பாடல் வரிகள்
Last Updated: Mar 21, 2023
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
ஆண்: ஒரு கதை உனது ஒரு கதை எனது
விடுகதை முடியுமா
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: வண்ணம் நூறு வாசல் நூறு
இருவரும்: கண் முன்னே காண்கின்றேன்
ஆண்: வானம்பாடி போலே மாறி
இருவர்: எங்கேயும் போகின்றேன்
ஆண்: வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
இருவர்: போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்
பெண்: ஒரு பகல் உனது ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா
ஒரு இமை உனது ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா
பெண்: ஒரு மலர் உனது ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா
ஒரு முகம் உனது ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா
பெண்: ஒரு பதில் உனது ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.