ஒற்றைக் கண்ணால பாடல் வரிகள்

Movie Name
Vel (2007) (வேல்)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Haricharan, Suchitra
Lyrics
Hari
ஆண்: ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலயே புரியலயே நீ யாருன்னு புரியலயே
தெரியலயே தெரியலயே இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)

(இசை...)

ஆண்: ஒ..... சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்க துடிக்கிதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெறுங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன்கால் தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியமால் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)

(இசை...)
ஆண்: ஓ.... கோடைக்கால சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத்தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணே பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹோ... (ஒற்றை...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.