ஆயிரம் ஜன்னல் வீடு பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Vel (2007) (வேல்)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்...)

(இசை...)

ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
சித்தப்பாவின் மீசையப் பாத்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்

குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் (ஆயிரம்...)
(இசை...)

ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண்: ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஆண்: ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்


குழு: வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்...)

ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.