தொப்புள்கொடி சொந்தம் பாடல் வரிகள்

Movie Name
Vel (2007) (வேல்)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Yuvan Shankar Raja
Lyrics
தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு தொலைஞ்சி போனதே
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே
யாரு செஞ்ச பாவம் இது எந்த நெஞ்சு தாங்குறது
தாய் புள்ள பாசம் இது எந்த சாமி சேக்குறது
கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம் உண்மை ஆனதே
காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே
பெத்த தாய்க்கு பிள்ள பாசம் மறந்து போனதே
அட காலம் செஞ்ச கோலம் மாறிப்போனதே

ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம் அது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி பூவ தேட நாதியில்ல
கண்ணுக்குள்ள விழுந்த தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து இப்போ பாசியானதே
இவன் நெஞ்சுக்குள்ள வீரம் கொறஞ்சு போனதே
அட ரெட்ட புள்ள ஒத்தையா பிரிஞ்சு போனதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.