கனா கண்டேனடி பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Parthiban Kanavu (2003) (பார்த்தீபன் கனவு)
Music
Vidyasagar
Year
2003
Singers
Madhu Balakrishnan
Lyrics
Yugabharathi
கனா கண்டேனடி தோழி

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள
நான் கண்டேன்

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து தடுக்க
இதயம் இரண்டும் கட்டி கொள்ள
நான் கண்டேன்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை
நான் கண்டேன்

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறி தடுக்க
கூச்சம் உன்னை வெட்டி தள்ள
நான் கண்டேன்

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
நான் கண்டேன்

நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி
என்னில் உன்னை
நான் கண்டேன்

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

கனா கண்டேனடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.