உலகம் நினைவில் இல்லை பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
Mahathi
Lyrics
Yugabharathi
உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதிய வெயில் அடித்தும் மனதில் மழைப் பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்
 இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

 எனது மனக்குகையில் புதிய ஒளி பரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு இதழில் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தையென தவழ்கிறேன்
எனை ஏனோ நானே இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
 இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.