அழகு முகம் மலர்ந்து பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
V. Prasanna
Lyrics
Yugabharathi
அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே

எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே

சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே

தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே

புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்

இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.