கனவு சில சமயம் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
V. Prasanna
Lyrics
Yugabharathi
கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுது வரை விழித்திரு
இது யூகிக்க முடியாக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்வி கூட அழகடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க இதயம் விழித்திருக்க
அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம்
இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.