பாத்து பாத்து பாடல் வரிகள்

Movie Name
Manjapai (2014) (மஞ்சப்பை)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
Hariharasudan, Vandana Srinivasan
Lyrics
Yugabharathi
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
கோழி றெக்கை உன்ன பார்த்து
வானவில்லா ஆனேன்
கொஞ்ச நேரம் உன்ன பேசி
கண்ணதாசன் ஆனேன்
கூட பந்து நீயும் தீண்ட
பூமி பந்து ஆனேன்
கூரு கத்தி கண்களால
ஊதுபத்தி ஆனேன்
நூலு கண்டு உன்னால், கோலி குண்டு ஆனேன்
பாத மண்ணு யேனோ, பூசும் மஞ்சள் ஆனேன்
ஜோடியாக நீயும் சேர
பட்டு பூச்சி பட்டம் ஆனேன்
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
நேத்து உன்ன பார்த்த பின்பு
தூங்கலானு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க
தோர்த்துத்தானே போனேன்
தோத்து நீயும் போடுரெனு
கோபமாகி போனேன்
கொஞ்சிடாம போனியேனு
சாப்பிடாம போனேன்
உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்
புல்லி நீயும் வைக்க கோலமாகி போனேன்
கூடு விட்டு கூடு பாய
கொக்கு மக்கு ஆகி போனேன்
பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.