சட்டென தூறலும் பாடல் வரிகள்

Movie Name
Manjapai (2014) (மஞ்சப்பை)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
Karthik
Lyrics
Yugabharathi
சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான் 
தினமும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான் 
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமாய் மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா
மொத்தமும் மாறி போவேனா
கற்பனை நான் செய்வேனா
கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க
நீ இல்லாமல் வாழ்வேனா
சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
உனது புன்னகை உரசி செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும்
நிகழுகின்றதே மாயங்கள்
எதை கண்டும் பயந்ததில்லை
இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும்
என் விழி உன்னை தேடுதடி
தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கைகளில் ஓடுதடி
சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்தால் தன்னாலே
இரு கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போல நான் துள்ள
என் இதயம் ஆனது தவிடுபொடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.