எங்க புள்ள இருக்க பாடல் வரிகள்

Movie Name
Kayal (2014) (கயல்)
Music
D. Imman
Year
2014
Singers
Balram
Lyrics
Yugabharathi
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன், மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி

அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே எடுத்தாயடி
பொத்தி வச்ச ஓன் நினைப்பு
பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி

எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி
உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே செத்துடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க, நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ, கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன், மொத்தமா நோகுரேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.