பறவையா பறக்குறோம் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Kayal (2014) (கயல்)
Music
D. Imman
Year
2014
Singers
Haricharan
Lyrics
Yugabharathi
பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்
போற வழியில பூவா
சிரிக்கிறோம் சிரிக்கிறோம் சிரிக்கிறோம்
எங்க ஊரு உலக உறவா
நினைக்கிறோம் நினைக்கிறோம் நினைக்கிறோம்
ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா
ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம்
சூரியன் போல நாங்க சுழலுவோம்
சோகம் வந்தா குப்பையில வீசுவோம்
பூமி பந்து மேல, ஒத்தையடி பாத போடுவோம்
வானவில் எங்களுக்கு ஜோடி
நிதம் வட்ட நிலா கூட சில ஆடி
மேகம் ஏறி வெரசா நடப்போமே
அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே
பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்

ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டில்
அத போல வாழ தேவையில்ல நோட்டு
கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல
ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல
நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்
இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல
நாங்க உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவலை கிடையாது...........

நாங்க போற பாதை எதுவும் முடியாது........
பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.