உன்ன போல ஒருத்தர பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Vetrivel (2016) (வெற்றிவேல்)
Music
D. Imman
Year
2016
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல      (உன்ன)
     
சாமி போல வந்தவனே     
கேட்கும்முன் நீ தந்தவனே      
நான் வணங்கும் நல்லவனே     
நல்ல உள்ளம் கொண்டவனே     
என் ஒட்டுமொத்த     
ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே      (உன்ன)
     
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ     
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ     
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே     
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே     
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்     
உன் உறவென்பது யுக யுகங்களை      
கடந்தது தானே      (உன்ன)
     
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே     
கன்னி வரம் கேட்கிறேன்     
நானும் அரங்கேறவே     
உன்னருகில் வாழுவதொன்று     
போதும் இந்த மண்ணிலே     
வேறு ஒன்றும் தேவை இல்லை     
யாவும் உந்தன் அன்பிலே     
எனை ஆளவே வந்த மகராசனே     
நான் உனக்காகவே பல பிறவிகள்     
துணை வருவேனே      (உன்ன)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.