பாட்டு ஒன்னு பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Jilla (2014) (ஜில்லா)
Music
D. Imman
Year
2014
Singers
Yugabharathi
Lyrics
Yugabharathi
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்லை
போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

ஆளு அம்பு சேனை எல்லாம்
தேவயில்லை நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமேல் நானடா

மீசைவச்ச தாயை போல
பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா

எனை நானே பார்த்துக்கொள்ள
கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலே தானோ உன்மேல்
தனி பாசம்

உனக்குள்ளே என்னை நீயும்
அடைகாக்கும் அன்பை பார்த்து
வருங்கால நட்பும் கூட
நம்மை பேசும்

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா
ஹே…ஹே…ஹே…

வீர தீர சூரர்கெல்லாம்
வேர்த்து போகும் உன்னை கண்டால்
உன்னை போல் இல்லை ஒருவன் மண்ணிலே ஹே…

நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…

உயிர் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிர் என்றால் என்றோ ஓர் நாள்
பிரிவாயே…

ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாமே இந்த புவிமேலே

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்லை
போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.