கொஞ்சும் கிளி பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Kedi Billa Killadi Ranga (2013) (கேடி பில்லா கில்லாடி ரங்கா)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Yugabharathi, Yuvan Shankar Raja
Lyrics
Yugabharathi
கொஞ்சும் கிளி பாட வச்சா, கும்மாலமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா...
கோயிலுல சூடம் வச்சா, கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காந்தம் வச்சா டா...

வெட்கம் அத தள்ளி வச்சா, வில்லங்கமா புள்ளி வச்சா
அத்தனையும் சொல்லி வச்சா டா
அந்த புள்ள யேதோ அப்படியே புள்ளி வச்சா டா...

ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா
சூரியன போல அவள் கண்ணுல தான் பாக்கையில
சூரதேங்கா ஆனேன் டா
கட்டிவச்ச பூவெடுத்து கூந்தலில வெக்கயில
நாரா நானும் போனேன்டா
ரெட்டகையில் தீபெட்டிய நெஞ்சு குழியில் பத்திகிச்சு
வேர ஒன்னும் வேணான்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னும் மட்டும் போதும்னு
ஜோரா வாழ்ந்து சாவேன்டா
(கொஞ்சும்)

போகயில அந்த புள்ள பொண்ணு மாரி
பொக்குனு சிரிகையில முத்து மாரி
கால் கொலுசு பார்க்கையில் வெள்ளி மாரி
போடா அவ மாரி
யாரு பொழிவா
யாரு பொழிவா
பூமியில காதல் பூ மாரி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள பேச
சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா
சட்டுனு தான் மாறும் பாத
தன தன்னனானே...
முன்னால நான் காமராசு
அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தன தன்னனானே...