மைனா மைனா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Mynaa (2010) (மைனா)
Music
D. Imman
Year
2010
Singers
Shaan
Lyrics
Yugabharathi
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....


சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற


கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா
மைனா... மைனா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.