கைய புடி கண்ணு பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Mynaa (2010) (மைனா)
Music
D. Imman
Year
2010
Singers
Naresh Iyer, Sadhana Sargam
Lyrics
Yugabharathi
கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..ஏ...எ..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்..
விலகாத அன்போடு சேர்ந்து இருக்கனும் நீயும் நானும்

கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..

உன்னை யின்றி வேற சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே

உன்னை நினைக்கெயில் பசி எடுக்கல
நடு நிசியில விழி உறங்கல
விடியறை வரை எதும் புடிக்கல
விடுகதை இது விடை கிடைக்கல
ஏனோ .......

அடை மழையிலும் குளிரெடுக்கல
சுடும் வெயிலிலும் மணல் கொதிக்கல..
மனம் மறந்திடும் வழி தெரியல..
எதுவரையில் இது வரும் புரியல...
ஏனோ........

கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது

புவிமேல.....

சுற்றும் உலகில் என்ன அதிசயம்
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
வந்த நினைவுகள் என்னை உரசுது
ஏனோ ........

எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு..
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

கைய புடி ம்ம்ஹும்.ம்ம்.
கைய புடி....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.