போன உசுரு வந்துருச்சு பாடல் வரிகள்

Movie Name
Thodari (2016) (தொடரி)
Music
D. Imman
Year
2016
Singers
Haricharan, Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
(பெ)போன உசுரு வந்துருச்சு 
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு 

(பெ)போன உசுரு வந்துருச்சு
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு


(பெ)இது போல ஒரு நாளே வர வேணா இனி மேலே 
நொடி கூட எட்டி இருக்காத 
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத 
 
(ஆ)போன உசுரு வந்துருச்சு 
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு 

(ஆ)இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் 

(ஆ)உன நானும் ஒட்டி இருப்பேனே 
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே
(பெ) ஹோ ஹோ ஹோ....... ஹோ ஹோ.. ஹா...
 
(பெ)சேர்ந்து இருக்கும் உள்ளத்துல 
துணை யாரு நமக்கு வெள்ளத்துல 

 (ஆ)உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது 

(பெ) நடந்தாலே அது சுகம் தானே 

(ஆ) துணையாக நானும் வாருவேனே 

 (பெ)சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே 

 (ஆ)ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் 
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே 

(பெ)(ஆ)ஓஹோ ஹோ ஹோ ஹோ  

(பெ)ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவயில்ல

(ஆ)ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க

(பெ)சிரிப்போமே நந்த வனம் போல
அது போதும் இந்த உயிர் வாழ

(ஆ)போகும்வர இந்த காதல்
நம்மகாக்கும்ண்ணு நினச்சா வெலகும்
வேதன

(பெ) போகயிலும் நாம ஒத்துமயா போகபோறோம் இதுதான் பெரிய சாதன
ஹோ ஹோ ஹோ ஹோ....


(ஆ)போன உசுரு வந்துருச்சு
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே
(பெ)ம் ம் மம் மம் ஹோ ஹோ ஹோ......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.